உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான கேப்டனாக ரகானே நியமனம்

உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான கேப்டனாக ரகானே நியமனம்

இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணியின் கேப்டனாக ரகானே நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி எதிர்வருகிற 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இதில் மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் பரோடாவை எதிர்கொள்கிறது.

இதற்கான மும்பை அணி நேற்று (புதன்கிழமை) அறிவிக்கப்பட்ட நிலையில், ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இளம் வீரரான ப்ரித்வி ஷா அணியில் இடம்பிடித்துள்ளதோடு, ஷ்ரேயாஸ் அய்யர் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா, பாகிஸ்தான் உட்பட ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கிண்ண தொடர் எதிர்வருகிற 1ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்கான இந்திய அணியில் ரகானேவிற்கு இடம் கிடைக்கவில்லை என்பதால் மும்பை அணிக்காக விளையாடவுள்ளதாக கூறப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]