உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்தலை நடத்த தயார் – மேலதிக ஆணையாளர் முஹம்மத் தெரிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தலை நடத்த தேர்தல்கள் செயலகம் தயாராகி வருவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம். எம். முஹம்மத் தெரிவித்தார். இம்முறை இத்தேர்தலில் போட்டியிட பிரதான கட்சிகளான ஐ.தே.க. மற்றும் ஸ்ரீல.சு.க. உள்ளிட்ட 70 கட்சிகள் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதான கட்சிகளுக்கு ஏற்கனவே இத் தேர்தல் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும்இ ஏனைய கட்சிகளுக்கு இது தொடர்பில் தெளிவுபடுத்தும் கருத்தரங்குகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திருத்தச் சட்ட மூலம் பாராளுமன்றில் (09) திங்கட்கிழமை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் “உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திட்டவட்டமாக 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெறும்” என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா பாராளுமன்றில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை 337 உள்ளூராட்சி மன்றங்களுக்குஇ 8 ஆயிரம் மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]