உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்வது எப்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடல்

உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்வது எப்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடல்

உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பிலும் வகுக்கப்பட வேண்டிய வியூகங்கள் தொடர்பிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளது. யாழ் மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் மேற்படி சந்திப்பு இன்று மலை 3.00 மணியளவில் தொடங்கியது.

இச்சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர், செயலாளர் உடன் வட மாகாண சபை உறுப்பினர்களும் புளொட் அமைப்பு சார்பாக வட மாகாண அமைச்சர் சிவனேசன் உடன் அவ்வமைப்பின் பிரமுகர்களும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் – ரெலோ சார்பாக கட்சியின் பொதுச் செயலாளர் நாயகம் எம். ஸ்ரீகாந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதராலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர் கனகரட்ணம் விந்தன், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், கோவிந்தன் கருணாகரம் (ஜனா), கட்சியின் இணைத்தலைவர் ஹென்றி மகேந்திரம், கட்சியின் நிர்வாக செயலாளர் நித்தி மாஸ்டர் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]