உள்ளூராட்சித் தேர்தல் நவம்பரில்

நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுவரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் இவ்வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறக்கூடிய சாத்தியங்கள் தென்படுவதாக அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள புதிய தேர்தல் முறையின் கீழ் இந்தத் தேர்தல் நடத்தப்படலாம்.

தற்சமயம் 4 ஆயிரத்துக்கு சற்று அதிகமாகவுள்ள மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை எல்லை நிர்ணய அடிப்படையில் 8 ஆயிரமாக உயர்வடையும். எனினும், அந்த எண்ணிக்கையை 7 ஆயிரமாகக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதில் 25 வீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் மனுக்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதிமுதல் கோரப்படுமென மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அண்மையில் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]