இரவு 7 – 8 மணிக்குள் முதலாவது தேர்தல் முடிவு வரும்

உள்ளூராட்சித்  தேர்தல் முடிவு

உள்ளூராட்சித் தேர்தலின் முடிவுகள், அன்று இரவு 7 மணிக்கும், 8 மணிக்கும் இடையில் வெளிவரத் தொடங்கும் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு 10ஆம் திகதி, மாலை 4 மணியுடன் முடிவடையும். உடனடியாக, அந்தந்த வாக்களிப்பு நிலையங்களிலேயே, அந்தந்த வட்டாரத்துக்குரிய வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தேர்தல் முடிந்து மூன்று, நான்கு மணி நேரங்களில் சிறிய சபைகளின் முடிவுகளை, அதிகாரபூர்வமாக அறிவிக்கக் கூடியதாக இருக்கும்.

எனினும், பெரிய மாநகரசபைகளின் முடிவுகளை வெளியிட அதிக நேரம் தேவைப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடிய சரியான நேரத்தை கூறுவது கடினம். ஆனால் நாங்கள் இரவு 7 மணிக்கும், 8 மணிக்கும் இடையில், ஆரம்ப முடிவுகளை வெளியிட முடியும் என்று எதிர்பார்க்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.