உள்ளூராட்சித் தேர்தல் : சட்டமூலம் நாடாளுமன்றம் வருகிறது

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பிலான அனைத்து தடைகளுக்கும் தீர்வுகாணப்பட்டுள்ள நிலையில் வர்த்தமானியில் வெளியிடப்படுள்ள குறித்த சட்டமூலத்தை அடுத்த நாடாளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்ற அரசு தீர்மானித்துள்ளதாக மீன்வள மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

உள்ளூராட்சித் தேர்தலுக்கு சு.க தயாராகவே உள்ளது. தேர்தலை பிற்போடும் நோக்கம் எங்களுக்கில்லை. தேர்தலியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலும் தயாராகவிட்டது. இம்முறை சு.கவின் மத்திய குழு பெயர் பட்டியலை தயாரிக்கவில்லை. மாறாக எமது தொகுதி அமைப்பாளர்களே பெயர் பட்டியலை தயாரித்துள்ளனர்.

அடுத்த நாடாளுமன்ற அமர்வில் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பிலான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பப்படும். பின்னர் அவர் தேர்தலுக்கான அறிவிப்பை விடுப்பார்.

உள்ளூராட்சித் தேர்தலில் சு.கவின் அனைத்து ஆதரவாளர்களும் எம்முடனே இருப்பர். ஐ.தே.கட்சிக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் செயற்படுபவர்கள் மாத்திரமே ஜி.எல். பீரிஸின் கட்சியுடன் இணைந்து செயற்படுவர். அதவேளை, கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் நபர்கள் தொடர்பில் சு.கவின் மத்திய குழு எதிர்காலத்தில் பாரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]