உள்ளூராட்சித் தேர்தலை தாமதங்களின்றி நடத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

உள்ளூராட்சித் தேர்தலை தாமதங்களின்றி நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் பைஸர் முஸ்தப்பாக கூறியுள்ளதாவது,

உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் தற்போதைய சட்டத்தில் சில உடனடித் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலை

தற்போதைய சட்டத்தில் காணப்படும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய சட்டமூலத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

முன்னைய எல்லை மீள்நிர்ணயத்தில் காணப்பட்ட தவறுகளைத் திருத்தும் முகமாக தேர்தல் விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்தி அவற்றை ஏற்கெனவே, வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலை, அச்சுத் திணைக்களத்தில் பணியாற்றும் எவரும் பார்க்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பில் கூறியுள்ளதாவது, தற்போதைய சட்டத்தில் காணப்படும் 50 குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அவை திருத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளது.

மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் என, நாட்டில் மொத்தமாக 335 உள்ளூராட்சி மன்றங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]