உள்ளுர் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்பெறவில்லை

உள்ளுர் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்பெறவில்லை

அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விசேட வர்த்தக பண்டக வரி குறைக்கப்பட்டதன் மூலம் உள்ளுர் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மெனிங் சந்தை பொது வர்த்தக சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று முன்தினம் நடத்திய ஊடக சந்திப்பில் வைத்து, அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விசேட வர்த்தக பண்டக வரிகள் குறைக்கப்படுவதாக அறிவித்தார்.

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், பருப்பு, கருவாடு மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றுக்கான வரிகளே இவ்வாறு குறைக்கப்பட்டன.

அதன்படி, நேற்றைய பாதீடு உரை சமர்ப்பித்த நிதியமைச்சர், ஒரு கிலோ உருளைக்கிழங்கு 80 ரூபாவாகவும், பெரிய வெங்காயம் மற்றும் பருப்பு ஆகியவற்றின் ஒருகிலோ 150 ரூபாவாகவும், கருவாடு கிலோகிராம் 750 ரூபாவாகவும் தேங்காய் எண்ணெய் 350 ரூபாவாகவும் விற்கப்படும் என தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மெனிங் சந்தை பொது வர்த்தகர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எம்.எம் உபசேன கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் முன்வைத்துள்ள விலைப்பட்டியலில் பார்க்க குறைந்த விலையில் சந்தையில் பொருட்களின் விலை காணப்படுவதாக குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]