உள்ளுராட்சி தேர்தலை பகிஸ்கரிக்கப் போகின்றோம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவிப்பு

 

 

 

 

 

 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்காக எந்த அரசியல்வாதிகளும் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத காரணத்தினால் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களாகிய நாம் வருகின்ற உள்ளுராட்சி தேர்தலை பகிஸ்கரிக்கப் போகின்றோம் என காணாமல் ஆக்கப்பட்வா்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று (08) 292 ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்து போதே இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

அவா்கள் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களின் ஒவ்வொரு தேர்தல் விஞ்ஞாபனத்திலும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் விடயத்தை முகவுரையாக எழுதி வாக்குகளை பெற்று தங்களின் சுயநல அரசியலை நடத்துகின்றார்களே தவிர காணாமல் ஆக்கப்பட்டவா்களின் விடயத்தில் எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை.

எனவே எதிர்வரும்கின்ற தேர்தலிலும் எங்களுடைய விடயத்தை முன்வைத்து வாக்கு கேட்டு வருகின்றவா்களுக்கு நாங்கள் தக்க பாடம் புகட்டவுள்ளோம், அந்த வகையில் இந்த உள்ளுராட்சி தேர்தலில் நாம் எவருக்கும் வாக்களிக்கப் போவதில்லை, எனத் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]