உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெறும்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி

யாழ்ப்பாணம்; நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெறும், மக்கள் மாற்றத்தினையே விரும்புகின்றார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (17) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அம்பலப்பட்டு நிற்கின்றார்கள். தமது பிரச்சினைகளைக் கூட மக்களின் நலன் சார்ந்ததாக யோசிக்காமல் இருக்கின்றார்கள். இவர்களின் அடிப்படையான பிரச்சினைகள் கூட மக்களின் நலன்சார்ந்ததாக கொண்டிருக்கவில்லை. முகமூடிக்கொள்ளைக்காரர் போன்று ஒரு பகுதியினர் தமக்கு வாக்களிக்க வேண்டுமென்று கேட்கின்றார்கள். மற்றைய முகமூடிக்கொள்ளையர்கள் இல்லை இல்லை அவ்வாறு வாக்களிக்க வேண்டாம் என எமக்கே வாக்களியுங்கள் என சொல்;கின்றார்கள்.

மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தம்மை ஒதுக்கிக்கொள்கின்றார்கள். மக்கள் ஒரு மாற்றத்திற்காக நிற்கின்றார்கள். மாற்றத்தினையே பெரிதும் விரும்புகின்றார்கள்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் 40 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடுகின்றார்கள். பெண்களுக்கு 40 வீதத்திற்கு அதிகமாக கொடுத்திருக்கின்றோம். ஆனால், 50 வீதமானவை கொடுக்க வேண்டும். அதுவே கட்சியின் நிலைப்பாடு, அந்த நிலைப்பாட்டினை அடுத்த முறை கவனத்தில் எடுத்து பெண்களுக்கான பங்களிப்பினை 50 வீதமாக உயர்த்துவோம்.

மாகாண சபை அதிகாரத்தில் இருப்பவர்கள் யாழ். கஸ்தூரியார் கடைத்தொகுதி சட்டரீதியற்றதென கூறி, நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். அந்த வழக்கினை மேன்முறையீட்டிற்கும் கொண்டு சென்றபோது, அந்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றினால் தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளது.

தனித்தனியாக ஓய்வு பெற்ற நீதியரசர்களைக்கொண்டு விசாரணைகளைச் செய்துள்ளனர். தேர்தல் காலத்தில் ஈ.பி.டி.பிக்கு மாநகர சபை போகப் போகுதென்றதற்காக சேறு பூசும் செயற்பாடுகளை செய்கின்றார்கள்.
அதேநேரம், மத்திய வங்கிப் பிணை முறி சம்பந்தமாக தற்போது பல கதைகள் எழுந்துள்ளன. அதைப்பார்த்தால் மாத்திரமே அனைவருக்கும் தெரியும். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அரசியலைப் பாவித்து திசை திருப்பவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. வடமாகாண சபையிலும் கூட ஊழல் மற்றும், ஒதுக்கப்படும் நிதிகள் பயன்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

இவ்வாறான பல குற்றச்சாட்டுக்கள் மற்றும் வாக்குறுதிகளின் மத்தியில் மக்கள் தற்போது மாற்றத்தினையே விரும்புகின்றார்கள். பொய் பிரட்டு சொல்பவர்கள் அவருக்களுக்கே வாக்களிப்பதாக சொல்கின்றார்கள். மக்களின் பிரச்சினைகளை யார் தீர்;த்தார்களோ அவர்களை தான் மக்கள் தேடுகின்றார்கள்.

மக்கள் ஈ.பி.டி.பிக்கு அமோகமாக வாக்களிப்பார்கள். ஈ.பி.டிபிக்கு அமோக வெற்றி. வரும். அன்றும் இன்று மக்கள் தமது குறைகளை நிவர்த்தி செய்கின்றார்களோ,  இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திருகோணமலையில் நடைபெற்ற பொங்கல் விழாவின் போது, அடுத்த பொங்கலுக்குத் தீர்வு கிடைக்குமென்கின்றார்.. தீர்;வு கிடைக்குமா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
ஆதற்கு அவர் பதிலளிக்கையில், அவர் ஒவ்வொரு பொங்கல் வாற நேரத்திலும் பொங்கலுக்குத் தீர்வு வரும் என சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றுகின்றார்கள். இதையே எதிர்வரும் பொங்கலுக்கும் அவர் சொல்வார். தமிழ் மக்களை மடையர்களாகவே அவர் நினைக்கின்றார்.

இவ்வாறு தான் சுமந்திரன் ஏக்க ராச்சியத்திற்கு (ஒற்றையாட்சி மற்றும் ஒருமித்த ஆட்சி, என சொல்கின்றார். ஓற்றையாட்சியையே தமிழ் மக்களுக்கு கொடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக் முயற்சி செய்கின்றார்கள். கடந்த காலங்களில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால், தற்போது மக்கள் மத்தியில் செல்லும் போது, மக்களின் ஆணைகளைப் பார்த்தால், எதிர்காலத்தில் ஈ.பி.டி.பிக்கு ஆணை கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]