இரு தோணியில் கால் வைப்பவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டாம் – சீ.வி.கே.சிவஞானம்

இரு தோணியில் கால் வைப்பவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டாம் – சீ.வி.கே.சிவஞானம்

சீ.வி.கே.சிவஞானம்

யாழ்ப்பாணம்; ஏதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்ய வேண்டும். இரு தோணியில் கால் வைப்பவர்களை தெரிவு செய்ய வேண்டாமென வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வலியுறுத்தியுள்ளார்.

வடமாகாண சபையின் 2018 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டின் மூன்றாம் நாள் விவாத்தின் 114வது அமர்வு இன்று வியாழக்கிழமை (14.12) காலை 10.00 மணியளவில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது.

அதன்போது, முதலமைச்சர் சரியான நேரத்தில் அவைக்கு வருகை தந்து விட்டார். ஆனால் ஏனைய உறுப்பினர்கள் தாமதமாக அவைக்கு வருகை தந்தனர்.

அத்துடன், நேற்றைய தினம் முதலமைச்சர் உட்பட 15 உறுப்பினர்களே இறுதி நேரத்தில் அமர்வில் இருந்துள்ளார்கள். ஊடகங்கள் தமது அவதானிப்புக்களை சரியான முறையில் செய்கின்றார்கள். தேர்தல்களின் போது மக்கள் தவறிழைக்கின்றார்கள். நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டியவர்களை தெரிவு செய்ய வேண்டும். இரு தோணியில் கால் வைப்பவர்களை தெரிவு செய்ய வேண்டாம்.

ஜனநாயகத்தின் தூண்களாக உள்ள ஊடகவியலாளர்கள் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். முன்னைய காலங்களில் மக்களுக்கு சேவை செய்வதற்காகவே பலர் இருந்தார்கள். தற்போது மக்கள் பெயர்களைப் பார்த்து வாக்களிக்கின்றார்கள். மக்களுக்குச் சேவை செய்யக்கூடியவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள். அவர்களைத் தெரிவு செய்ய வேண்டும்.
சபைக்கென ஒரு நியதி இருக்கின்றது. பொது நலன் சார்ந்து உறுப்பினர்கள் செயற்பட வேண்டும். இரு தோணில் கால் வைப்பது சரியானதல்ல.

இவைகளை மக்களுக்கு சரியான முறையில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவேன். இவற்றினை மக்களுக்குச் சொல்ல வேண்டிய தேவை உள்ளது.

சீ.வி.கே.சிவஞானம்

மக்களுக்கு எத்தனை ஆயிரம் பேர் இருக்கின்றார்கள். உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய பொது மக்கள் நலன்சார்ந்து யோசித்து இறுதி வரை மக்களுடன் இருக்கக்கூடியவர்களை தெரிவு செய்ய வேண்டுமென்றார்.

அதேவேளை, காலை 12 உறுப்பினர்களே அவைக்கு உரிய நேரத்தில் வருகை தந்துள்ளார்கள். ஏனையவர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை. அதுவும், வெளிமாவட்டங்களில் உள்ளவர்கள் சரியான நேரத்திற்கு வருகின்றார்கள். யாழ்.மாவட்டத்தில் உள்ளவர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை என்றும் சாடினார்.

எனவே, சபைக்கு தாமதமாக வரும் உறுப்பினர்களின் பெயர் சொல்லி வெளிப்பத்துவேன். எனவே, உறுப்பினர்கள் தமது உறுப்பினாகளுக்குரிய கடமையைச் செய்ய வேண்டும். ஆகையினால், பொது நலன் சார்ந்து, பொது மக்கள் இனி வரும் காலங்களில் மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய சரியான அர்ப்பணிப்புள்ளவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்றும் மக்களை விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]