உள்ளுராட்சிமன்றங்களில் ஆட்சியமைக்க வழங்கப்பட்ட கால எல்லை இன்று நிறைவு

தேர்தல் நடைபெற்ற சகல உள்ளுராட்சிமன்றங்களில் ஆட்சியமைக்க வழங்கப்பட்ட கால எல்லை இன்று நிறைவடையவுள்ளது.

ஆட்சியமைக்க தவறிய உள்ளுராட்சி மன்றங்களை நடத்திச்செல்லும் அதிகாரம் ஆணையாளர்களுக்கு வழங்கப்படும் என, தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமது சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் எண்ணிக்கையை வர்த்தமானியில் வெளியிட சில உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு முடியாமல் போயுள்ளது.

பெண் பிரதிநிதிகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

மேல் மாகாணத்தில் உள்ள சகல உள்ளுராட்சி மன்றங்களிலும் ஆட்சியமைக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]