உள்ளாடையுடன் போராடும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்! பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமா?

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி அயர்லாந்து பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளாடையுடன் போராட்டத்தில் ஈடுபட்டது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

17 வயது இளம்பெண் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், இளம்பெண் அணிந்திருந்த ஆடைகளே பாலியல் பலாத்காரத்திற்கு தூண்டியதாக குற்றவாளிக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின்போது குறித்த இளம்பெண் அணிந்திருந்த உள்ளாடையே அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய ஆதாரம்.

இதையடுத்து இளம்பெண்ணின் ஒப்புதலுடனே நடந்த பாலியல் உறவு அது என்றும், அதை பாலியல் பலாத்காரமாக சித்தரிக்க கூடாது எனவும் கூறி நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 27 வயது இளைஞரை விடுவித்தது.

இந்த விவகாரம் அயர்லாந்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் பலாத்காரத்திற்கு இரையான இளம்பெண் அளிந்திருந்த அதே வண்ணத்திலான உள்ளாடையுடன் பாராளுமன்ற உறுப்பினர் ரூத் கோப்பினெர் அவைக்கு சென்றுள்ளார்.

பின்னர் இந்த உள்ளாடை எப்படி பாலியல் பலாத்காரத்திற்கு காரணமாக அமையும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மாண்பு மிகுந்த அவையில் உள்ளாடையை வெளிப்படையாக காண்பிப்பது முறையல்ல என ஒப்புக்கொண்ட அவர், ஆனால் கொடூர பாலியல் பலாத்காரத்திற்கு அவளது உள்ளாடைகள் காரணமாக அமைந்தது என கூறப்படுவது நகைப்புக்கு உரியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அயர்லாந்து மக்களிடையே கடும் கொந்தளிப்பு காணப்படுகிறது. சமூக வலைதளங்களிலும் தங்கள் எதிர்ப்பை பொதுமக்கள் பதிவு செய்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]