உள்நாட்டு உற்பத்தி சீமெந்து விலை அதிகரிப்பு

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து வகைகள் இரண்டின் விலையை அதிகரிக்க நுகர்வோர் சேவை அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரவுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகார சபையின் தலைவர் ஹஷித திலகரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, 50 கிலோகிராம் சீமெந்து மூடையொன்றின் விலை 30 ரூபாயால் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமையை 930 ரூபாயாக காணப்பட்ட 50 கிலோகிராம் சீமெந்து மூடையொன்றின் விலை 960 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சீமெந்து தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருளை இறக்குமதி செய்வதற்காக செலவு அதிகரித்துள்ளமை காரணமாக இவ்வாறு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.