உள்நாட்டு இறைவரி திணைக்கள ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தம்

உள்நாட்டு இறைவரி சட்டமூலத்தின் நகல் வரைவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஊழியர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உள்நாட்டு இறைவரி தொழிற்சங்க கூட்டமைப்பு உறுப்பினர்கள் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி உள்நாட்டு இறைவரி சட்டமூலம் தொடர்பில் விளக்கமளித்திருந்தனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக வரையப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்தின் ஊடாக மதஸ்தலங்கள், பொதுநல சங்கங்கள் மற்றும் மரண சேவை சங்கங்கள் ஊடாகவும் வருமானம் பெற்றுக் கொள்வதற்கு யோசனை முன் வைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி சேவை சங்கத்தின் உதவி செயலாளர் எச்.ஏ.எல். உதயசிறி கூறினார்.

குறித்த சட்டமூலம் சம்பந்தமாக அரசாங்கம், தொழிற்சங்க சம்மேளனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று உள்நாட்டு வருமான பொது சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் அஜித் புஷ்பகுமார கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]