உலக வங்கியின் துணைத் தலைவர் ஜான் வலிஸர் இலங்கை விஜயம்

உலக வங்கியின் துணைத் தலைவர் ஜான் வலிஸர் இரண்டு-நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று வியாழக்கிழமை கொழும்பு வந்தடைந்தார்.

இந்த விஜயத்தின் போது இலங்கையின் மறுசீரமைப்பு நிகழ்ச்சிநிரல் தொடர்பாக நேரடியான புரிந்துணர்வை அவர் பெற்றுக்கொள்ளவுள்ளார். மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலானது, மேல்-நடுத்தர வருமான தகைமை கொண்ட நாடாக இலங்கை மாற்றமடைவதற்கும் பகிரப்படும் சுபீட்சத்தை அதிகரித்துக்கொள்வதற்கும் முக்கியமானதாகும்.

‘ பரந்துபட்ட ரீதியிலான நிதித்துறை, பொருளாதார மற்றும் ஆட்சிமுறை மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது. இந்த முன்முயற்சிகளுக்கு உலக வங்கி குழுமமானது தற்போது வழங்கிவருகின்ற ஆதரவை எவ்வாறு மேலும் வலுப்படுத்தமுடியும் என்பது தொடர்பாக அரசாங்கத்தரப்பினருடனான சந்திப்புக்களின் போது விளங்கிக்கொள்வதற்கு ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்.’ என வலிஸர் தெரிவித்தார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை நிறைவேற்றியமை தொடர்பாக அரசாங்கத்திற்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ள திரு. வலிஸர் ‘ அபிவிருத்தியின் வினைத்திறன்மிக்கதன்மை தொடர்பான அவதானக்குவிப்புடன் பயன்படுத்தப்படுமாக இருப்பின் இலங்கையின் சுபீட்சத்தை நோக்கிய பாதையில் தகவல் அறியும் உரிமைச் சட்டமானது ஒரு பெரும் மாற்றகரமான விடயமாக அமையும். இது அனைத்து பொதுமக்களுக்கும் விசேடமாக பொருளாதார ரீதியில்; நலிவடைந்தவர்களுக்கும் இ தனியார்ஃஅரச சார்பற்ற துறையினர் மற்றும் ஊடகத்துறையினர் ஆகியோர் அரச துறையின் தீர்மானமெடுக்கும் செயற்பாட்டில் முக்கிய பங்காற்றுவதற்கான கருவியாக அமைந்துள்ளது.’ எனத் தெரிவித்தார்.

தகவல் அறியும் உரிமைச் சட்ட நடைமுறைக்கிடலில் ஏனைய அபிவிருத்திப் பங்காளர்கள் மற்றம் முக்கியமான பங்குதாரர்களுடன் இணைந்து ஒத்துழைப்பை வழங்க உலக வங்கியின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
2002ம் ஆண்டில் உலக வங்கியில் இணைந்து கொள்வதற்கு முன்னதாக திரு. வலிஸர்இ சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார நிபுணராகவும் அமெரிக்க காங்கிரஸ் வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தின் முதனிலை ஆய்வாளர்களிலொருவராகவும் பணியாற்றியிருந்தார்.

காங்கிரஸ் அலுவலகத்தில் அவர் , ஓய்வூதிய மறுசீரமைப்பு மற்றும் வரி மறுசீரமைப்பு தொடர்பான ஆய்வுபணிகளில் கவனம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிதியியல் கொள்கை, வரி மறுசீரமைப்பு, ஓய்வூதிய மறுசீரமைப்பு, மற்றும் உதவிகளின் வினைத்திறன்மிக்கதன்மை என பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக பரந்துபட்டரீதியிலான தொழில்சார் பொருளாதார சஞ்சீகை ஆக்கங்களை அவர் பிரசுரித்துள்ளமை குறிப்பிடத்கத்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]