உலக மே தினத்தில் தொழிலாளர்களை அவமதித்த த.தே.ம.மு நகரசபை உறுப்பினர்

உலக மே தினத்தில் தொழிலாளர்களை அவமதித்த த.தே.ம.மு நகரசபை உறுப்பினர்.

உலக தொழிலாளர் தினமான இன்று தொழிலாளர்களை அவமதிக்கும் வகையில் சாவகச்சேரி நகரசபையின் நகர வட்டார தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் நடந்துகொண்டுள்ளார்.

உலக தொழிலாளர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்ற அதேவேளை இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் அரசியல் கட்சிகளாலும் தொழிற்சங்கங்களினாலும் மே தினம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

மேதினத்தை தொழிலாளர்கள் அனுஷ்ரிப்பதற்கு வசதியாக வர்த்தக சங்கங்கள் பொதுச்சந்தைகள் என்பன ஏகமனதான தீர்மானமாக தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதற்கு விடுமுறையை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் சாவகச்சேரி நகரசபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நகர வட்டார உறுப்பினர் தொழிலாளர்களை அவமதிக்கும் வகையில் செயற்பட்டுள்ளார். இன்றைய தினம் சாவகச்சேரி வணிகர் கழகத்தின் தீர்மானத்திற்கமைய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் சந்தை வியாபாரிகளும் முற்றாக வியாபாரத்தில் ஈடுபடாமல் ஒற்றுமையாக தொழிலாளர் தின எழுற்சிப்பேரணியில் பங்கெடுப்பதற்காக விடுமுறையை அறிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த த.தே.ம.மு உறுப்பினர் நகரசபை தவிசாளரிடம் சென்று நகர சந்தையை இன்றைய தினம் மூடுவதற்கு எவ்வாறு அனுமதிப்பீர்கள் தொழிலாளர் தினமாக இருந்தாலும் பொதுச்சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட வேண்டும் என தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கு நகரசபைத் தவிசாளர் வர்த்தகர்கள் மற்றும் சந்தை வியாபாரிகள் மேதினத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இன்றைய தினம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என அவர்களாகவே முடிவெடுத்துள்ளார்கள். அது தொழிலாளர்களின் உரிமை அதில் நகரசபை தலையிடமுடியாது என தெரிவித்துள்ளார்.

இதனை ஏற்றுக்கொள்ளாத குறித்த த.தே.ம.மு உறுப்பினர் தவிசாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என அநாகரிகமான முறையில் எச்சரிக்கை செய்துள்ளார். அதுமட்டுமின்றி நகரசபையின் சந்தை வரிவசூலிப்பு உத்தியோகத்தர்களையும் கீழ்த்தரமான முறையில் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார். குறித்த தமிழ்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரே அண்மையில் முன்னாள் போராளி ஒருவரின் வாழ்வாதாரத்தை தடுக்க முயன்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]