உலக நிதியத்தின் நிதிப்பங்களிப்பில் யாழ்குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் – ராஜித சேனாரட்ண

உலக நிதியத்தின் நிதிப்பங்களிப்பில் யாழ்குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் – ராஜித சேனாரட்ன

ராஜித சேனாரட்ன

வடமாகாணத்தில் சுகாதாரசேவையினை மேம்படுத்தும் நோக்கில், எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா தடுப்பிற்கான உலக நிதியத்தின் நிதிப்பங்களிப்பில் யாழ்குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தலைமையில் இன்று (24.09) ஆரம்பித்து வைக்கப்பட்டது

எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா தடுப்பிற்கான உலக நிதியத்தின் 2000 பில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள பிரதேச மற்றும் ஆதார வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

ராஜித சேனாரட்ன

அந்த வகையில் இருபது தசம் ஒரு மில்லியன் நிதியுதவில் இரண்டு மாடிகளை கொண்டதாக யாழ் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவிற்கான புதிய கட்டிடத்தை அமைச்சர் ராஜித சேனாரட்ன நேற்று திறந்துவைத்தார்.

அத்துடன் யாழ் தீவக மக்களின் சுகாதாரசேவையை மேம்படுத்துவதை இலக்காக கொண்டு 68 மில்லியன் ரூபா நிதியுதவியல் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு மற்றும் நிர்வாக அலகுக்கான இரண்டு மாடிகட்டிடத்தொகுதியையும் அதே சமயம் திறந்து வைத்தார்.

சுகதார பிரதி அமைச்சர் பைசர்காசிம் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட்கூரே, யாழ் மாவட்டஇராணுவ தளபதி மேஜர்.ஜெனரல் தர்சன ஹெட்டியராட்சி வடகாகாண சுகாதார அமைச்சர் குணசீலன், உலக நிதி நிறுவனத்தின் திட்ட பணிப்பாளர் லின்டா உள்ளட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]