வெசாக் தின வைபவத்தை முன்னிட்டு உலக நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு

இலங்கையில் நடைபெறும் ஐநா வெசாக் தின வைபவத்தில் கலந்துகொள்ளுமாறு உலக நாடுகளின் தலைவர்களுக்கு உத்தியோகபூர்வ அழைப்பினை மேற்கொள்ளும் நோக்கில் பௌத்த அலுவல்கள் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ வெளிநாடு செல்கிறார்.

கம்போட்டியா, வியட்னாம், நோபாளம், லாவோஸ், மியன்மார் ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதியின் விசேட செய்தியுடன் அமைச்சர் செல்வதாக அமைச்சு அறிவித்துள்ளது.

பௌத்த நாடுகளின் ஒத்துழைப்புடன் ஐநா வெசாக் தின நிகழ்ச்சி இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.