உலக தரப்படுத்தலில் பின்னடைவை சந்தித்துள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை

உலக தரப்படுத்தலில் பின்னடைவை சந்தித்துள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை.சர்வதேச Skytrax விமான சேவைகள் வகைப்படுத்தலுக்கமைய 2017ஆம் வருடத்திற்கான தரப்படுத்தலிலேயே ஸ்ரீலங்கன் விமான சேவை 81 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

வருடாந்தம் மேற்கொள்ளப்படும் குறித்த தரப்படுத்தலில் கட்டார் எயார்வேஸ் நிறுவனம் முதலாவது இடத்தையும்,சிங்கப்பூர் விமான சேவை இரண்டாவது இடத்தையும்,மூன்றாவது இடத்தை ஜப்பான் ஓல் நிபொன் விமான சேவையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த தரப்படுத்தலில் கடந்த வருடம் இலங்கை 67 ஆவது இடத்திலும்,2015ஆம் ஆண்டு 73 இடத்திலும்,2013ஆம் ஆண்டு 68ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் தரப்படுத்தல் விமான சேவைகளின் பாதுகாப்பு,வசதிகள்,கட்டண அறவீடு,மொழி வசதிகள் என்பவற்றை மையப்படுத்தி மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக தரப்படுத்தலில்

Skytrax இந்த நிறுவனமானது 1989ஆம் ஆண்டு பிரித்தானியாவை தலைமையகமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]