உலக தனியார் பல்கலைக் கழகங்களில் நைற்றா பயிலுநருக்கு மேலதிக கல்விவாய்ப்பு தலைவர் நஸீர் அஹமட் நடவடிக்கை

தமிழக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட சென்னை ஆவடி வேல்டெக் தனியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் மூலமாகப் பயிற்சிபெறும் மாணவர்களுக்கு பல்வேறு துறைசார் மேலதிக கல்வி மற்றும் பயிற்சிகளை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் பற்றிய பேச்சுவார்த்தைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் புதிய தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் மற்றும் சென்னை ஆவடி வேல்டெக் தனியார் பல்கலைக் கழகத்தின் வெளிநாட்டு உறவுகளுக்கான பணிப்பாளர் கலாநிதி எஸ். சிவபெருமாள், மற்றும் மாணவர் இணைப்புத் தலைமையதிகாரி எஸ். நூர்ஜஹான் ஆகியோருடன் இந்தச் சந்திப்பு புதன்கிழமை 13.03.2019 பிற்பகல் இடம்பெற்றது.

இதன்போது, வெல்டெக்ஸ் மூலமாக நடப்படும் பயிற்சிகள் குறித்து ஆராயப்பட்டதுடன் குறிப்பாக பி.ரீச் புறோகிராம் ((B.Tech Programmes)  ஸ்கூல் ஒப்எலற்றிக்ல்ஸ் அன்ட் கொம்யூனிக்கேசன் ஸ்கூல் ஒப் கொம்புரிங் ( (School of Computing)ஸ்கூல் ஒப் மெக்கனிக்கல் அன்ட் கொன்ஸ்ரக்ஷன் ( (School of Mechanical and Construction)  ஸ்கூல் ஒப் மீடியா அன்ட் கொம்மினிக்கேஷன் (School of Media and Communication) ஸ்கூல் ஒப் மனேஜ்மென்ர் (School of Management)   போன்ற பல்வேறு துறைகளில் இலங்கை மாணவர்கள் பயிற்சி மற்றும் புலமைப் பரிசில்களை பெறுதல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

வெகு விரைவில் இது குறி;த்த மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட்  கலந்துரையாடலின் இறுதியில் கருத்துத் தெரிவித்தார்.

மேலும்,  இதுபோன்று அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மன், பிரிட்டன், ஐக்கிய அரபு இராஜ்ஜியம், மலேசியா, சீனா, பிலிப்பைன்ஸ், ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளிலுள்ள தனியார் பல்கலைக்கழகங்களிலும்; நைற்றாவில் பயிலும் மாணவர்கள் மேலதிக பயிற்சிகளையும் கல்விகளையும் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் அந்தந்த  நாட்டுக்குப் பெறுப்பான தூதரகங்களின் சம்பந்தப்பட்ட  அதிகாரிகளுடன் நடாத்தப்பட்டு உடன்பாடுகள்  எட்டப்படும்.

இவையாவும் இவ்வருடத்துக்குள்  இடம்பெற  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்; தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]