உலக சுற்றுலா தினமான இன்று யாழ். நகரில் தமிழர் பாரம்பரிய கலைகளுடன் கூடிய நடைபயணம்

யாழ்ப்பாணம் புகையிரத நிலைய வீதியில் இன்று (25.09) காலை 9 மணியளவில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார்.

இந்த நடைபயணத்தில் தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரிய கலைகளான மாட்டு வண்டி சவாரி, சிலம்பாட்டம், மயிலாட்டம், தமிழ் இன்னிசை முழக்கம், காவடி, உள்ளிட்ட தமிழர் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் கலைஞர்களின் ஊர்வலம் என்பன இடம்பெற்றன.

வடமாகாணத்தில் தமிழர் பாரம்பரிய வரலாற்று சின்னங்கள் மற்றும் சுற்றுலா துறை தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நடைபயணம் முன்னெடுக்கப்பட்டது.உலக சுற்றுலா தினமான இன்று உலக சுற்றுலா தினமான இன்று உலக சுற்றுலா தினமான இன்று உலக சுற்றுலா தினமான இன்று உலக சுற்றுலா தினமான இன்று உலக சுற்றுலா தினமான இன்று

இந்த நடைபயணத்தில் வடமாகாண முதலமைச்சரின் செயலாளர் மற்றும் சுற்றுலா துறை சார்ந்த அதிகாரிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இந்த நடைபயணம் புகையிரத நிலையம் வீதி வழியாக யாழ் ஆஸ்பத்திரி வீதியைச் வந்தடைந்து அங்கிருந்து சத்திரத்து சந்தியூடாக பண்ணையில் நிறைவடைந்தது.

அதனைத் தொடர்ந்து, யாழ்.பொது நூலகத்தில் சுற்றுலா துறை சார்ந்த நூல் வெளீயீடும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.