உலக சனநாயக தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு ஜனநாயகம் பற்றியும் சர்வஜன வாக்குரிமை பற்றியும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டி வருவதுடன், பதாதைகளையும் மட்டக்களப்பு நகரின் பிரதான பகுதிகளில் காட்சிப்படுத்தினர்.

மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஆர்.சசிலன் தலைமையில் செப்ரம்பர் 15 உலக ஜனநாயக தினத்தை முன்னிட்டு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

உலக சனநாயக தினத்தை

மட்டக்களப்பு போதனா சைவத்திய சாலை, பிரதான பஸ்தரிப்பு நிலையம், பொதுச்சந்தை, அரசடி, கல்லடி, உள்ளிட்ட பல புகுதிகளிலும் இதில் மாவட்ட தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள் ஒட்டி வருகின்றனர்.

சனநாயகத்தின் வெளிப்பாடு தேர்தலாகும், சர்வஜன வாக்குரிமையைப்பாதுகாப்போம் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலான சுவரொட்டிகளை மட்டக்களப்பு நகரின் பல பகுதிகளிலும் இன்று காலை முதல் ஒட்டி வருகின்றனர்.

உலக சனநாயக தினத்தை

நாட்டின் சகல மாவட்டங்களிலும் ஜனநாயக்கத்தின் ஆதாரம் வாக்குரிமையே – சர்வஜன வாக்குரிமையை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு திட்டங்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

உலக சனநாயக தினத்தை

இலங்கை தேர்தல் ஆணைக்குழுவானது வாக்காளர்களை தேர்தல்கள் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் பல்வேறு செயற்திட்டங்களை கடந்த காலங்களிலும் முன்னெடுத்துவருகின்றமையுமு; குறிப்பிடத்தக்கது.

உலக சனநாயக தினத்தை

உலக சனநாயக தினத்தை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]