முகப்பு Business உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதற்கு அமெரிக்கா – சீனாவிற்கு இடையில் நிலவும் வர்த்தக போரே காரணம் எனவும், இதனால் உலக பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி, அமெரிக்க டபில்யூ.டீ.ஐ எண்ணெய் பீப்பாயின் விலை 65.21 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ள நிலையில், இலங்கையிலும் எரிபொருட்களின் விலை குறைவடைக் கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கடந்த வாரத்தில் வீழ்ச்சியடைந்த, ப்ரன்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.83 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com