உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் பாலியல் தொல்லை??

பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் குறித்து பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மனம் திறந்து பேசியுள்ளார்.

உலகஅழகி என்றாலே நம் அனைவரின் நினைவிற்கும் முதலில்வருபவர் ஐஸ்வர்யா ராய் தான். அத்தனை அழகு நிறைந்த ஐஸ்வர்யா, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியாவின் சிட்னியில் முகாமிட்டுள்ளார்.

அங்கு பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அமெரிக்க சினிமா தயாரிப்பாளர் ஹெர்விமீதான குற்றச்சாட்டிற்கு பின் உலகம்முழுவதும் நடைபெற்ற பல்வேறு பாலியல் வன்முறைகள் வெளிச்சத்திற்கு வந்ததில் மகிழ்ச்சி.

#MeToo என்ற ஹேஸ்டேக்மூலம் பலபெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமையான அனுபவங்கள் குறித்து மனம் திறந்துபேசி வருகின்றனர். சினிமா துறை என்று சுருக்காமல் அனைத்து துறைகளில் பணிபுரியும் பெண்கள் தாங்கள் சந்தித்த கொடுமைகள் குறித்து பதிவிட்டுவருகின்றனர்.

மிகஇருண்ட பக்கங்களாக மனதில் தேக்கி வைத்திருந்த அந்த கொடுமைகள் குறித்து பெண்கள் மனம் திறந்து பேசுகின்றனர்.

இதன் மூலம் பெண்களுக்கும் நேர்ந்துள்ள கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதுஉண்மையில் மகிழ்ச்சி.” என கூறியுள்ளார். நானும் ஒரு சிலரால் பாதிக்கப் பட்டேன் அதில் இருந்து மீளவே பல நாட்கள் ஆனது .

கடந்த வருடம் வெளியான பிரபல அமெரிக்க சினிமா தயாரிப்பாளர் ஹேர்விகுறித்த சர்ச்சைக்கு பின் தான் குறித்த ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகபரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]