உலகில் முதன்முறையாக செயற்கை கருத்தரிப்பின் மூலம் பிறந்த 2 சிங்க குட்டிகள்

உலகில் முதன்முறையாக செயற்கை கருத்தரிப்பின் மூலம் பிறந்த 2 சிங்க குட்டிகள்

செயற்கை கருத்தரிப்பின் மூலம் பெண் சிங்கம் ஒன்று 2 சிங்க குட்டிகளை ஈன்றுள்ளது.

தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகளின் முயற்சியால் இந்த விடயம் சாத்தியமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் பிரிடோரியாவில் உள்ள பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பெண் சிங்கத்துக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்துள்ளனர்.

அந்தவகையில், உடல் திடகாத்திரமான ஆண் சிங்கத்தின் விந்தணுவை (capuZ) சேகரித்த விஞ்ஞானிகள், அதை தகுதி வாய்ந்த பெண் சிங்கத்தின் கருமுட்டையுடன் இணைத்து செயற்கை கருத்தரிப்பு செய்தனர்.

அதை தொடர்ந்து 2 சிங்க குட்டிகள் பிறந்தன. அதில் ஒரு ஆண், ஒரு பெண் என 2 குட்டிகளும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளன. ஒரே மாதிரியுள்ள 2 குட்டிகளும் வன விலங்குகள் சரணாலயத்தில் விளையாடும் காட்சியினை பொதுமக்கள் கண்டு ரசிக்கின்றனர்.

இதன் மூலம் முதன் முறையாக செயற்கை கருத்தரிப்பின் மூலம் பிறந்த சிங்க குட்டிகள் என்ற பெருமையை இவை பெற்றுள்ளன.

இத்தகைய செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அழிந்து வரும் யானை இனத்தை பாதுகாக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

26 ஆப்பிரிக்க நாடுகளில் சிங்கங்கள் அதிகம் வாழ்கின்ற நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக அவை அழிவை சந்தித்து வருகின்றன.

இதனையடுத்து, 43 சதவீதம் சிங்கங்கள் அழிந்துள்ள நிலையில், தற்போது சர்வதேச அளவில் 20 ஆயிரம் மட்டுமே உள்ளன. சிங்கத்தின் இனத்தை காப்பாற்ற விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட நிலையில், இந்த புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

உலகில் முதன்முறையாக உலகில் முதன்முறையாக உலகில் முதன்முறையாக உலகில் முதன்முறையாக

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]