உலகின் மிக பழமையான மொழியின் மூலம் இனங்களுகிடையிலான ஒற்றுமையினையும் ஏற்படுத்த முடியுமென ஜனாதிபதி தெரிவிப்பு

யாழ்ப்பாணம், உலகின் மிக பழமையான தமிழ் மொழி மூலம், இன ஐக்கியத்தினையும் இனங்களுகிடையிலான ஒற்றுமையினையும் ஏற்படுத்த முடியுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழில் தெரிவித்தார்.

தேசிய தமிழ் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்

கமத்தொழிலை முன்னேற்றுவதற்கு கமத்தொழில் திணைக்களத்தின் ஊடாக பல நடவடிக்கைகைள முன்னெடுக்கவுள்ளோம். விதை நெல் பெற்றுக்கொடுக்கப்பட்டது. விவசாயதுறையினை மேம்படுத்த இன்னுபல உதவிகளை மேற்கொள்ளவுள்ளோம். காலை விவசாயிகளை சந்தித்த போது பல விதமான வேண்டுகோள்களை முன்வைத்தார்கள். வெளிநாட்டில் இருந்து உருளைக்கிழங்கினை இறக்குமதி செய்ய வேண்டாம். தேவையான உருளைக்கிழங்கினை தாம் தருவதாக சொல்கின்றார்கள்.

விவசாய அமைச்சுடன் பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்வோம். 1960 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாண விவசாயம் பற்றி படித்துள்ளேன். பலர் சிறப்பான விவசாயம் செய்கின்றார்கள் என சிங்கள புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. விவசாயத்தினை பெற்றுக்கொடுத்து விவசாயத்தினை மேம்படுத்த உள்ளோம்.
உலகின் மிக பழமையான

உலகின் மிக பழமையான

உலகின் மிக பழமையான

உலகின் மிக பழமையான

தமிழ் தின மொழி பற்றிய தேசிய விழா இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. பாடசாலை அதிபர் மற்றும் கல்வி அமைச்சிற்கும் இராஜாங்க அமைச்சர் ராதாகிருஸ்ணனுக்கும் ஓத்துழைப்பிற்காக நன்றி கூறுகின்றேன்.

மாணவர்களுக்கு வகுப்பறையில் மட்டுமன்றி புதிய உலகத்திற்குள் செல்ல வேண்டும். போட்டியில் வெற்றி பெற வேண்டும். தலைசிறந்தவர்களில் தலைசிறந்தவர்களாக இருக்க வேண்டும். உயர்ந்தவர்களில் உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

தமிழ் மொழியும் சிங்கள மொழியும் 2000 ஆண்டுக்கு மேற்பட்ட மொழிகள். இலங்கை இந்தியாவிற்கு1000 ற்கும் மேற்பட்ட ஆண்டுகளை மேல் பெரிய கலாசாரத் தொடர்புகளும் உள்ளன.

இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுகின்றன. முழு உலகிலும் 1000 ற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.

மொழி மூலமாக மக்களை பிரிக்க என்னுகின்றார்கள். அது தவறு அனைத்து மொழிகளையும் படிக்க வேண்டும். எனக்கு தமிழ் மொழியை படிக்க முடியாததை இட்டு மன வருந்துகின்றேன்.

இந்து தத்துவத்தில் பகவத் கீதையில் உள்ளவற்றினை படிக்க வேண்டும். ஆராய வேண்டும். கடந்த காலங்களில் மொழிகள் மூலம், இதிகாசங்கள் மூலம் ஒன்று பட்டார்கள். அநுராதபுரம் மற்றும் பொலனறுவை யுகத்தினைப் பற்றி நன்றாக தெரியும். தேசிய நல்லிணக்கத்தினைப் பற்றி பேசுகின்றோம். ஒரே சகோதரர்களாக வாழ வேண்டும்மென்று என்றுகின்ர்.

மனிதாபிமானம் உள்ளவர்கள் மொழிகளின் ஊடாக ஒன்று பட முன்வர வேண்டும். தேசிய நல்லிணக்கம் பற்றிய யுகம் தான் பொலனறுவையில் உள்ள மகா பாராக்கிரமபாகுவின் யுகம், 11 மற்றும் 12 நூற்றாண்டில் முழு நாடும் ஒரே நாடாகத் தான் இருந்தது. பொலனறுவையில் பௌத்த கோவில்களில் இந்து கோவில்களும் உள்ளன.

அதேபோன்று சிங்கள மன்னர்கள் தென்னிந்தியாவில் இருந்து திருமணம் செய்துகொண்டார்கள்.

திருமணம் சம்பந்தமாக காணி மற்றும் நாடு கைப்பற்றல் இடம்பெற்றது. பொலனறுவையில் இருக்கக்கூடிய மகாபாராக்கிரமபாகு புனித தந்தத்தினைக்கொண்டு வருவதற்கும் பாதுகாப்பதற்கும் இந்தியாவில் இருந்து வேலைக்காரப் படைதான் கொண்டு வந்தனர்.

தமிழ் மொழி தினத்தில் இந்த அனைத்து விடயங்கள் பற்றியும் சிந்திக்க வேண்டும். பல பாடசாலை மாணவ மாணவிகளை சந்தித்தேன்.

நாங்கள் கல்வி அமைச்சும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சும் இணைந்து சிங்கள, தமிழ் மொழி மிகவும் சிரேஸ்ட மொழி.உலகின் மிக பழமையான

உலகின் மிக பழமையான

சிங்கள தமிழ், முஸ்லீம் வேறுபாடுகள் இன்றி கவனிக்கும் அரசு தான் எமது அரசு. கடந்த அரசாங்கங்கள் இதுவரை ஒதுக்காத பணத்தினை கல்விக்காக அதிகமான பணத்தினை ஒதுக்கியுள்ளோம். இந்த வருடம் ஒதுக்கினோம், எதிர்வரும் வருடமும் ஒதுக்கவுள்ளோம்.

இந்த 10140 பாடசாலைகள் உள்ளன. 2 லட்த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றார்கள். ஆனைவரின் எதிர்காலத்தினை அரசு என்ற வகையில் பொறுப்பெடுக்கின்றோம்.

 

உலகின் மிக பழமையான

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]