உலகில் மறைத்து வைக்கப்பட்ட இடங்களை காண ஆவலா?

வாடகை வீடுகளில் இருப்பவர்களுக்கு ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு இன்னும் பெரிய வசதியான வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

நம்முடன் இருக்கும் பொருட்கள் மீதே ஆசை பெரிதாக இருக்கும். அதுனுள் தான் நாமே வாழ்கிறோம் எனும் போது, வீடுகளின் மீதான ஆசை எப்போதும் குறையாது.

இந்த தொகுப்பில் உள்ள வீடுகளின் படங்களை காணும் போது, வாங்க வேண்டும் என்ற ஆசைக்கு பதிலாக, ஒரு தடவையாவது இவற்றுள் ஏதாவது வீட்டில் ஒரு நாளாவது தங்கிவிட வேண்டும் என்ற ஆசை தான் அதிகமானோருக்கு வரும்.

ஏனெனில், இந்த வீடுகளை வாங்குவதும் கஷ்டம், கட்டுவதும் கஷ்டம்….

 இந்த வீடு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்திருக்கிறது.

நிலத்தில் இருந்து 6.5 அடி கீழே இருக்கிறது இந்த வீடு. கூரை மீது புள் பரப்பு போல அமைக்கப்பட்டுள்ளது. தொலைவில் இருந்து பார்த்தால் இது வீடு போலவே தெரியாது. ஆனால், வீட்டின் உள்ளே சகல வசதிகளும் அடங்கி இருக்கிறது.

 கனடா, பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருக்கிறது இந்த வீடு.
நிலத்தில் இருந்து 6.5 அடி கீழே இருக்கிறது இந்த வீடு. கூரை மீது புள் பரப்பு போல அமைக்கப்பட்டுள்ளது. தொலைவில் இருந்து பார்த்தால் இது வீடு போலவே தெரியாது. ஆனால், வீட்டின் உள்ளே சகல வசதிகளும் அடங்கி இருக்கிறது.
கனடா, பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருக்கிறது இந்த வீடு.
இதன் கூரை மிகவும் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. தொலைவில் இருந்து பார்த்தால் இங்கே வீடு இருக்கிறதா? என அறிவதே கடினம்…
சீனாவில் ஹுனன் என்ற பகுதியில் இருக்கும் ஒரு ஷாப்பிங் மால் மேலே வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் உதாஹ் எனும் இடத்தில் அமைந்திருக்கிறது இந்த பள்ளத்தாக்கு வீடு
இந்த வீடு 1986ல் திருமணமான புதிய தம்பதிகளின் கனவு வீடாக கட்டப்பட்டது.
இப்படி ஒரு ஐடியா வர காரணமே அந்த ஊர் கார்ப்பரேஷன் தான்.
மலை போன்ற பகுதியில் கட்டிடம் கட்ட கூடாது என்றதால், குகை போன்ற அமைப்பை தேர்வு செய்து இப்படி ஒரு வீட்டை கட்டியுள்ளனர்.
வெளியே இருந்து பார்க்கும் போது நீர்மூழ்கிக் கப்பல் போல தான் தெரியும்.
இந்த வீட்டில் இரண்டு அடுக்குகள் உள்ளன. கடலை பார்த்து ரசித்தப்படி இருக்கலாம். ரம்மியமான இயற்கை காட்சி சூழ காட்சியளிக்கிறது கிளிஃப் வீடு.
நார்வேயில் இருக்கிறது இந்த வீடு. இந்த வீட்டை கட்டுவதில் இருந்து சிரமமே ஒருங்கிணைப்பு தான்.

கொஞ்சம் கடினமான வடிவம் கொண்ட வீடு இது. இந்த அளவு கட்டியதே பெரிய சவாலுக்கு உரியது தான்.

டெசர்ட் ஒசிஸ் எனும் இந்த வீடு கலிபோர்னியாவில் இருக்கிறது.

இதன் அமைப்பு உதிர்ந்த இறந்த இலைகளின் வடிவம் போன்றதாகும். இது இரும்பு, காப்பர், கண்ணாடிகள் கொண்டு கட்டப்பட்ட வீடு ஆகும்.

கண்ணாடி கியூப் போன்ற அமைப்பில் அந்தரத்தில் தொங்கும் வீடு இது.

உலகில் மறைத்து

அந்தரத்தில் தொங்கும் வீட்டுக்குள் செல்லவே கொஞ்சம் தூரம் மேலே ஏற வேண்டும்.

உலகில் மறைத்து

இது இன்னும் கட்டப்படாத வீடு. இந்த ஐடியாவை முதலில் இதை வடிவமைத்த நபர் கூறியபோது நம்பவில்லை.

உலகில் மறைத்து

ஆனால், இந்த வீட்டின் டிசைன் படங்களை கண்டு இன்வெஸ்ட்டர்கள் குவிந்தனர். இது லெபனான்னில் இருக்கிறது.

உலகில் மறைத்து

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]