உலகில் சவாலாகவுள்ள கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு

உலகில் சவாலாகவுள்ள கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு

கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பானது உலகளவில் மிகப்பெரிய பாரிய சவாலாக உள்ளது.

எனினும் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பிற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ரஷ்யா மற்றும் opec நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்தமையும் முதல் காரணமாக பார்க்கப்படுகிறது.

சில நாடுகள் எண்ணெயின் விலையை நாளுக்கு நாள் உயர்த்துகின்றமையும், உலகளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க காரணமாகிறது. அத்தோடு புவிசார் அரசியல் அழுத்தங்கள் மற்றும் வர்த்தகப் போரும் இதற்கு காரணம்.

இந்நிலையில், உற்பத்தி குறைவாகவும், தேவை அதிகமாகவும் உள்ளமை விலை உயர்விற்கு காரணம் என்று கூறமுடியும்.

கடந்த 2014 ஆம் ஆண்டு கச்சா எண்ணெயின் விலை உலகளவில் வீழ்ச்சி கண்டதை தொடர்ந்து, இந்தியா போன்ற நாடுகள் எண்ணெய்கும் வரி விதிக்க ஆரம்பித்தன. குறித்த விலை உயர்வினால் வெறும் போக்குவரத்து செலவு மட்டும் அதிகரிகாது என்பதே உண்மை.

மேலும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்களுக்கு விலை அதிகரிப்பதோடு, நுகர்வோரே அனைத்து விதத்திலும் பாதிக்கப்படுவர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]