உலகின் முதல் த்ரீஸம் திருமணம். ஆனா 3 பேருமே ஆம்பளைங்க!

தனிமனித உரிமை என்பது ஒருவர் மற்றொருவருடைய வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று தான் கூறுகிறது. ஆயினும், சில சமயங்களில் ஓரினச் சேர்க்கை என்பது சரியானது தானா? என்ற விவாதங்கள் எழுந்துக் கொண்டே தான் இருக்கிறது.

இதை எதிர்த்தும், ஆதரித்தும் பல நாடுகள் சட்ட திருத்தங்கள் கொண்டு வந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆனால், இதற்கும் மேல் மூன்று பேர் சேர்ந்து திருமணம் செய்துக் கொள்ளும் சட்டம் கொலம்பியால் அதிகார பூர்வமாக வெளியாகியுள்ளது. இதன் படி முதன் முதலாக மூன்று ஆண்கள் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.

ட்ரைஜா (Trieja)!

இந்த சட்டத்தை கொலம்பியா அரசு 2016 ஏப்ரல் மாதத்தில் கொண்டு வந்தது. இதற்கு ட்ரைஜா என்ற பெயரும் வைத்துள்ளனர். Trio என்றால் மூவர், Pareja என்றால் தம்பதி இதையே ட்ரைஜா என கூறுகின்றனர். இந்த சட்டத்தின் கீழ் முதல் முறையாக மூன்று ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துள்ளனர். இதுவே இந்த முறையில் நடந்த முதல் திருமணமாகும். இதை சட்டப் பூர்வமாகவும் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

விக்டர்!

இந்த திருமணத்தில் விக்டர் தனக்கான இரண்டு துணையாக ஜான் அலெகண்ட்ரோ ரோட்ரிக்ஸ் மற்றும் மானுவல் ஜோஸ் பெர்முடீஸ் எனும் இருவரை தேர்வு செய்துள்ளார். இவர்கள் மூவரும் மேடேல்லின் நகரத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இவர் சட்டப் பூர்வமான கோப்புகளில் கையெழுத்து இட்டுள்ளனர்.

பொருளாதரா அமைப்பு!

விக்டர் தங்களுக்கான (மூவர் திருமணம்) பொருளாதார அமைப்பு வேண்டும் என விரும்புவதாக கூறியுள்ளார்.

உலகின் முதல் த்ரீஸம்

காதல், பிறப்புரிமை!

மேலும், விக்டர், “நாங்கள் எங்கள் மீது கொண்டுள்ள காதலுக்காக தான் திருமணம் செய்துக் கொள்ள முனைந்தோம். ஆனால், நாங்கள் எங்கள் புறப்புரிமை காக்கவும் இந்த திருமணத்தை செய்துக் கொண்டோம்” என தெரிவித்துள்ளார்.

உலகின் முதல் த்ரீஸம்

எங்கள் உறவு!

எங்கள் உறவானது உடனிருத்தல் மற்றும் ஒற்றுமை சார்ந்தது. எங்களுக்கென தனி சக்தி அல்லது பங்கு ஏதுமில்லை. நாங்கள் அனைவரும் சமம் தான் என கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]