உலகின் முதலாவது நவீன லேசர் வெசாக் அலங்காரபந்தல் நாளைமறுதினம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

உலகிலுள்ள முதலாவது நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்கார பந்தல் மக்கள் பார்வைக்காக நாளைமறுதினம்  வெசாக் போயா தினத்தன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்துவைக்கப்படவுள்ளது.

கொழும்பு காலிமுகதிடலில் நிர்மாணிக்கப்படுகின்ற இவ்வலங்கார பந்தல் நாளை மாலை 7 மணிக்கு முதன் முறையாக காட்சிபடுத்தப்படும். துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் வழிக்காட்டலிற்கமைவாக நிர்மாணிக்கப்படுகின்ற இந்நவீன வெசாக் பந்தல் எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் மக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்படும். கொலந்தொட்ட வெசாக் வலயத்திற்கு இணையாகவே இந்நவீன இவ்வெசாக் அலங்கார பந்தல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு இலங்கை , துறைமுக அதிகாரசபை மற்றும் துறைமுக பௌத்த சங்கம் ஆகிய ஒன்றினைந்தே கொலந்தொட்ட வெசாக் வலயத்தை நான்காம் தடவையாக ஏற்பாடுச் செய்துள்ளது. கொழும்பு காலிமுகதிடல் மற்றும் துறைமுக வளாகத்தை மையமாகக் கொண்டு இவ்வலயம் அமைக்கப்படவுள்ளது.

காலிமுகதிடலில் நிர்மாணிக்கப்படுகின்ற உலகின் முதலாவது நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்காரபந்தல் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இதன் உயரம் 60 அடிகளாகும். அகலம் 40 அடிகளாகும். புத்தரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கின்ற கதாபாத்திரங்கள் இவ்லேசர் கீற்று வெசாக் அலங்கார பந்தலில் காட்சிப்படுத்தப்படும்.

உலகின் முதலாவது

ஜேர்மன் நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ்வெசாக் அலங்கார பந்தலை பேராசிரியர் பிரபாத் சந்திம உக்வத்த அவர்கள் வடிவமைத்துள்ளார். விமலஜீவ தொம்பவத்த அவர்கள் இதற்கான பின்னனி இசை அமைத்துள்ளதுடன் , திமுத்து சிந்தக்க அவர்களினால் கதை விபரிக்கப்படும். இரவு வேளையில் ஆகாயத்தில் காட்சிப்படுத்தப்படுத்தப்படுத் இவ்வலங்கார பந்தல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்களின் மனங்களை கவருமென பேராசிரியர் பிரபாத் சந்திம உக்வத்த தெரிவித்தார்.

லேசர் முறையில் பல்வேறுப்பட்ட தொழில்நுட்ப முறைகள் காணப்படுகின்றன. வைத்திய துறையிலும் லேசர் முறை பயன்படுத்தப்படுகின்றது. அதேப்போல் யுத்த நடவடிக்கைளின் பொழுது, அளவீட்டு நடவடிக்கைகளின் பொழுது மற்றும் பொறியில் தொழில்நுட்பத்திலும் இவ் லேசர் தொழில்நுட்பம் பயன்படுகின்றது.
அதேப்போல் பொழுதுபோக்கு நடவடிக்கைகளின் பொழுது பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது.

பொழுதுபோக்கு நடவடிக்கைகளின் பொருட்டு உபயோகிக்கின்ற லேசர் கீற்றுகளையே நாம் அங்கு பயன்படுத்தவுள்ளோம். இதன் மூலம் உடம்பிற்கு எவ்வித கெடுதலும் நேராது. பொழுதுபோக்கு நடவடிக்கைகளின் பொருட்டு உபயோகிக்கின்ற லேசர் கீற்றுகளை இல்லையேல் லேசர் கலையை புத்த கதாபாத்திரங்களுடன் தொடர்புப்படுத்தி மக்கள் மத்தியில் பக்தியை ஏற்படுத்துவது எப்படி என்பதே இந்நிர்மாணப்பணிகளின் பொழுது நாம் எதிர்கொண்ட பிரதான சவாலாகும். நாம் இச்சவாலை வெற்றிக்கொண்டுள்ளோமென நான் நினைக்கின்றேனென் என்றும் பேராசிரியர் பிரபாத் சந்திம உக்வத்த தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]