உலகின் மிக குள்ளமான தாய் உடல்நலக்குறைவால் மரணம்

உலகின் மிக குள்ளமான தாய் என்று அழைப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டேக்கி ஹெரால்டு உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.

இவர் தனது 44-வது வயதில் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

உலகின் விசித்திர மனிதர்களில் ஒருவரான ஸ்டேக்கி ஹெரால்டு 2 அடி 4 இன்ச் உயரம் கொண்டவர்.

அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தைச் சேர்ந்த இவர் வில் ஹெரால்டு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் தம்பதிக்கு 3 குழந்தைகள் பிறந்தன.

இடுப்புக்கு கீழே வளர்ச்சி அற்ற ஸ்டேக்கி, உலகின் மிக குள்ளமான தாய் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிக குள்ளமான உலகின் மிக குள்ளமான உலகின் மிக குள்ளமான

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]