உலகின் சக்திவாய்ந்த குண்டு எங்களிடமே உள்ளது அமெரிக்காவுக்கு ரஷ்யா பதில்

 

உலகின் சக்திவாய்ந்த குண்டை சிரியா மீதான தாக்குதலின் போது அமெரிக்கா பயன்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டிருந்தாலும் அதனை விட சக்திவாய்ந்த குண்டு ரஷ்யாவிடம் உள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.

சிரியா மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா பயன்படுத்திய ஆயுதம் தொடர்பில் ரஷ்யாவின் ஓய்வுபெற்ற ரிக் பிராங்கா இராணுவத்தினர் பரிசீலனை செய்தனர். சிரியா மீதான தாக்குதலில் உயர் அழுத்தம் கொண்ட உலகின் சக்திவாய்ந்த குண்டை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளதாக கூறப்பட்டிருந்தது. என்றாலும் அதனை விடய சக்தி வாய்ந்த குண்டு ரஷ்யாவிடம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 12ஆம் திகதி சிரிய ஜனாதிபதி பஸாரல் அசாத் அந்நாட்டில் உத்தரவிட்ட தாக்குதல் காரணமாக 70 இற்கும் அதிகமான பொதுமக்கள் தாக்குதலுக்கு இழக்காகி உயிரிழந்திருந்தனர்.

இதற்கு ஐ.நா. கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. அத்துடன், பொது மக்கள் மீதான தாக்குதலுக்கு அனுமதியளிக்க முடியாது என்று அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்தத் தாக்குதலை கண்டித்து கடந்த 14ஆம் திகதி அமெரிக்கா சிரியாவின் இராணுவத் தளம் மீது அதிரடி தாக்குதல் நடத்தியிருந்தது.

இந்தத் தாக்குதலை பல சர்வதேச நாடுகள் வரவேற்ற சூழலில் ரஷ்யா எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் விவகாரம் மீது அமெரிக்கா எவ்வாறு மூக்கை நுழைக்க முடியும் என்று கேள்வியெழுப்பியிருந்தது.

சிரியா மீதான தாக்குதலுக்கு உயர் அழுத்தம் கொண்ட அணுகுண்டை அமெரிக்கா பயன்படுத்தியதாக கூறப்பட்டமை தொடர்பில் ஆய்வுசெய்தே மேற்படி தகவலை ரஷ்யா வெளியிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]