உலகளாவில் முதல் 5 இடங்களில் இடம் பிடித்த ரௌடி பேபி!

உலகளாவிய ரீதியில் ரேடியோ, ஆன்லைன் ஆல்பங்கள், யூடியூப்பில் டாப் இடம் பிடித்த பாடல்களின் தரவரிசை வாரந்தோறும் பில்போர்ட் பட்டியல் என அமெரிக்க ஊடகமான தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் வெளியிடும்.

இந்த பட்டியலின் இந்த வாரத்திற்கான தரவரிசையில் முதல் 5  இடங்களில் தனுஷின் மாரி-2 படத்தின் ரௌடி பேபி பாடலும் ஒன்றாக இடம் பிடித்துள்ளது.

இந்த பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க பாடகி தீ உடன் தனுஷ் எழுதி பாடியிருந்தார்.

இப்பாடலின் வீடியோ வெளியான நாளே 7 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருந்தது. தற்போது 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூப்பை கலக்கி வருகிறது.

மேலும் தனுஷ்- அனிருத் கூட்டணியில் வெளியான why this kolaveri? பாடலுக்கு பிறகு இந்த பட்டியலில் இடம் பிடிக்கும் முதல் தமிழ் பாடல் இது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]