வழக்கு தாக்கல் செய்வதற்கு அதிகாரம் இல்லை

உலகம் முழுவதும் ஊழலுக்கு எதிராக செயற்படும் நிறுவனங்களைப் பலப்படுத்தும் நோக்கில் 2012 ஆம் ஆண்டு இந்தோனோசியாவின் ஜகர்த்தா நகரில் ஒன்றுகூடிய 88 நாடுகளை சேர்ந்த நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வுகள் ஜகாரத்தா கோட்பாடுகள் என அழைக்கப்படுகின்றது.

ஜகார்த்தா கோட்பாடுகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் விசேட குழுவினருடனான கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு வெளியிடப்பட்ட பிரகடனத்தை வலுவூட்டும் நோக்கத்துடன் கொழும்பில் இம்முறை மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படும் வாக்குமூலங்களை அடிப்படையாக கொண்டு வழக்கு தாக்கல் செய்வதற்கு ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை. தற்போது திருத்தமொன்று கொண்டு வரப்பட்டுள்ளது.அது தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றால் ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கியவர்களை மீளவும் அழைத்து அவர்களின் சாட்சியங்களை மீளவும் எழுத்துமூலம் பதியாமல்,வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு வழக்கு தாக்கல் செய்ய முடியும். எனினும் காரணிகளை தௌிவுப்படுத்துவதற்காக, வாக்குமூலங்களை மீளவும் எழுத்துமூலம் பதிவு செய்யவேண்டியேற்படும், எவ்வாறாயினும் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுமாயின் எமது பணிகளை விரைவுப்படுத்த முடியும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]