உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் 1வது தேசிய அமர்வு

உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் 1வது தேசிய அமர்வு.
உலகத் தமிழ் மாணவர்
உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் முதலாவது தேசிய அமர்வு நேற்று கிளிநொச்சி பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. ஒன்றியத்தின் வட மாகாண தலைவர் மாவட்ட இணைப்பாளர் எம். தனுசன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
அமர்வின் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் ஏ.ஜோன்சன் ஒன்றிய ஆலோசகர் எம்.ஈசன்   வடகிழக்கு பகுதிகளின் ஒன்றியத்தின் இணைப்பாளர்கள் ஆலோசகர்கள் மற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள்  அடங்களாக பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது சமுதாயத்தின் நிகழ்கால கல்வி கலை கலாச்சாரம் பண்பாடு விளையாட்டு உள்ளிட்ட பல்கலையும் பொருளாதார வாழ்வியல் சார்ந்த ஆய்வுகள், தற்கால சமுதாயத்தின் தேவைப்பாடுகள் தொடர்பாகவும், பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் இன்னல்கள், ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் அமர்வின் பின்னர் ஊடக சந்திப்பொன்றையும் நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
உலகத் தமிழ் மாணவர்
உலகத் தமிழ் மாணவர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]