உலகத்தரம் வாய்ந்த படத்தின் மூலம் சினிமாவில் கால் பதிப்பதில் பெருமை!

சர்வதேச தரம் வாய்ந்த உளவு சார்ந்த படங்களில் பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகள் மிகவும் அவசியமானவை. அதற்கேற்ற திறமையும், உடல் மற்றும் மன பலம் உள்ள நடிகர்களால் மட்டுமே இவ்வாறான படங்களில் நடிக்க முடியும்.

இந்திய சினிமாவின் முதல் சர்வதேச உளவாளி படமான ‘விவேகம்’ படத்தில் அஜித் குமாருடன் விவேக் ஓபராய், காஜல் அகர்வால் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த பிரம்மாண்ட படத்தை சிவா இயக்க , ‘சத்ய ஜோதி பிலிம்ஸ்’ தயாரித்துள்ளது.

ஆகஸ்ட் 24 அன்று உலகம் முழுவதும் ‘விவேகம்’ ரிலீஸாகவுள்ளது. ‘Casino Royale’, ‘300: Rise Of An Empire’, ‘The Transporter Refunded’ போன்ற மாபெரும் வெற்றி பெற்ற ஹாலிவுட் படங்களில் நடித்த பிரபல ஸ்டண்ட் கலைஞர் சர்ஜ் க்ரோசோன் கஜின் [ Serge Crozon Cazin ] ‘ விவேகம்’ படத்தில் கதாநாயகன் அஜித்தின் அணியான ஐவரில் ஓருத்தராக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இது குறித்து சர்ஜ் க்ரோசோன் பேசுகையில், ”’விவேகம் ‘ போன்ற ஒரு உண்மையான உலகத்தரம் வாய்ந்த படத்தின் மூலம் இந்திய சினிமாவில் கால் பாதிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். இந்த கதாபாத்திரத்திற்கான இண்டர்வீயூவில் கலந்து கொண்ட பிறகே இயக்குனர் சிவா எனக்கு இந்த வாய்ப்பளித்தார்.

சிவாவின் காட்சிப்படுத்தல் முறையையும், படத்திற்கு என்ன வேண்டும் என்ற அவரின்  தெளிவும் என்னை ஈர்த்தது. அஜித் சாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவமாகும். ‘விவேகம்’ படத்தில் எனது காட்சிகளை முடித்த பின் வீடு திரும்பி போதுதான் அவர் இந்திய சினிமாவில் எவ்வளவு பெரிய ஸ்டார் என்றும் அவர் எவ்வளவு பெரிய பிரபலம் என்பதை தெரிந்துக்கொண்டேன். படப்பிடிப்பில் அவ்வளவு எளிமையாக இருந்தார். அவர் செய்த ஆக்ஷன் காட்சிகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது.

டூப் வேண்டாம் என்று கூறி எல்லா சண்டை காட்சி  சாகசங்களையும் தானே திறம்பட செய்து அசத்தினார். அவ்வளவு கடின உழைப்பாளி அவர் . படப்பிடிப்பு இடைவெளிகளில் அவருடன் நடந்த உரையாடல்களை எனது மனதில் இனிய நினைவாக என்றுமே இருக்கும் . அருமையாக படமாக்கப்பட்டுள்ள ‘விவேகம்’ படத்தை இந்திய சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசித்து கொண்டாடுவார்கள் என உறுதியாக கூறுவேன்” எனக் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]