உறுப்பினர்கள் சென்றாலும்; மக்கள் நம் பக்கம் – மஹிந்த

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டாலும், மக்கள் இணைந்து கொள்ள மாட்டார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

குணசிங்கபுர பூர்வாராம விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தலைவர்கள் வரப்பிரசாதங்களை எதிர்பார்த்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டாலும், மக்களிடம் அதுபோன்ற சிறிய இலக்குகள் இல்லை.

பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதுடன் மக்களுக்கு மிகவும் இக்கட்டான நிலை தோன்றியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]