உறவினர்கள் யாரும் தன்னை பார்க்க வராததால் தற்கொலைக்கு முயன்ற கைதி

உறவினர்கள் யாரும் தன்னை பார்க்க வராததால் தற்கொலைக்கு முயன்ற கைதி

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்து, ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.
உடும்பிராய் பகுதியைச் சேர்ந்த இராஜேஸ்வரன் கஜன் (வயது – 23) என்பவரே இவ்வாறு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

தன்னைப் பார்ப்பதற்கு உறவினர்கள் எவரும் சிறைச்சாலைக்கு வரவில்லை என்ற மனவிரக்தியிலேயே அவர் தற்கொலை முயற்சியை மேற்கொண்டார் என்று சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவித்தன. எனினும் தற்கொலைக்காக அவர் தூக்குப் போட்டுக்கொண்ட முறை தொடர்பில் சிறைச்சாலையிலிருந்து தகவலைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]