‘உருளைக்கிழங்கு’க்கான வரி அதிகரிப்பு

உருளைக்கிழங்கு

‘உருளைக்கிழங்கு’க்கான வரி அதிகரிப்பு

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கான விசேட வர்த்தக வரி இன்று நள்ளிரவு முதல் 29 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

ஒரு ரூபாவாகக் காணப்பட்ட விசேட வர்த்தக வரி இன்று நள்ளிரவு முதல் 30 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூர் உருளைக்கிழங்கு செய்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் புதிய வரித்திருத்தம் எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]