உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு கும்புறுமூலை வெம்பு காட்டுப்பகுதியிலிருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (21) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக கல்குடாப் பொலிஸார் தெரிவித்தனர்.

கும்புறுமூலை வெம்பு பகுதியில் டில்மா கம்பனி கட்டுமானம் நடைபெறும் பகுதியை அன்மித்த காட்டுப் பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதாக கல்குடா பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றினையடுத்து குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸார் சடத்தை மீட்டுள்ளனர்.

சடலத்தை இதுவரை இனங்காணப்படவில்லை. 45 தொடக்கம் 50 வயதுக்குட்பவட்டவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக கல்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம்சடலம்சடலம்சடலம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]