உரிய காலத்தில் திட்டங்களை வழங்காமையினால் மட்டக்களப்புக்கு 100 மில்லியன் இழப்பு

உரிய காலத்தில் திட்டங்களை வழங்காமையினால் மட்டக்களப்புக்கு 100 மில்லியன் இழப்பு

மாவட்ட நாடாளுமனற உறுப்பினரொருவர் கம்பெரலிய திட்டத்திற்கான முன்மொழிவுகளை உரிய நேரத்தில் வழங்காமல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதன் காரணத்தினால் 100 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தி மட்டக்களப்பு மக்களுக்கு கிடைக்காது போயுள்ளமை மிகவும் வேதனையான விடயமாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிநிநேசன் தெரிவித்தார்.

கம்பெரலிய திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்துக்குட்பட்ட மகிழவட்டுவானில் புனரமைக்கப்பட்ட கொங்கிறீட் வீதியினை மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – மஹிந்த ராஜபக்ஷவினால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனநாயகத்தின் வழியில் நின்று தோற்கடித்துள்ளது. எமக்கு யார் வெல்வது என்பது முக்கிய மல்ல யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே எமது இலக்கு.

ஒக்டோபர் 26ல் ஆட்சி கவிழ்ப்பு ஏற்பட்ட போது மஹிந்த ராஜபக்ஷ தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பினரையும் விலை பேசினார். எமது கட்சியிருந்த வியாழேந்திரன் கனடாவிலிருந்து வந்தார் என்ன நடந்தவென்று தெரியாது யாரிடமும் பேசாமல் தொலைபேசியை நிறுத்தி வைத்திருந்தார். அவருடைய தொடர்பு மஹிந்த ராஜபக்ஷவுடனே இருந்தது. பிரதியமைச்சு பொறுப்பேற்று இன்று பதவியிழந்து ஏமாற்றப்பட்ட நிலையில் உள்ளார்.

கடந்த காலத்தில் எமது பல உறவகள் கடத்தப்பட்டார்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள் இதற்கு காரணமாக இருந்தர்கள் ராஜபக்ஷ ஆட்சியினர். அவருக்கு எதிராக நாங்கள் செயற்பட்டோம். அவருடன் எமது பாராளுமன்ற உறுப்பினரொருவர் தாவினார் அவருக்கு எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிருந்து பிரிந்து தேசிய கட்சிகளில் சேர்ந்தவர்களின் நிலை என்வென்று கடந்த கால அரசியல் வரலாறுகள் தெழிவாக எடுத்துக் காட்டியுள்ளன. தங்களது சுய இலாபத்துக்காகவும் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும் யாராவது கட்சி மாறுவார்களானால் அவர்களுக்குரிய தண்டனை வாக்குச் சீட்டுகள் மூலம் வழங்கப்படும்.

அவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக மக்களைச் சென்றடையவேண்டும் அதில் பிச்சை வாங்கும் நடவடிக்கையில் நாங்கள் ஒரு போதும் ஈடுபட மாட்டோம். கம்பெரலிய திட்டத்தின் 100 மில்லியன் ரூபா நிதியில் மட்டக்கள்பபு மாவட்டத்தில் வாகரை முதல் துறைநீலாவணை வரை அபிவிருத்தி மேற்கொள்ளப்படுகிறது. இதில் 5 மில்லியன் பெறுமதியான திட்டங்களே மீதமுள்ளன. ஏனைய திட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன.

எமது கட்சியை விட்டுச் சென்ற மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் 100 மில்லியன் பெறுமதியான திட்டத்தில் ஒரு சதவீதம் கூட இன்னும் மக்களை சென்றடையவில்லை. உரிய நேரத்தில் அபிவிருத்திக்கான திட்டங்களை வழங்காமல் வெளிநாடு பயணம் செய்தமையினால் 100 மி;ல்லியன் ரூபாக்கான திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கவில்லை. ஏனைய இருவரின் நிதியில் தற்போது வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

அரசாங்கம் இன்றும் 200 மில்லியன் ரூபா அபிவிருத்திக்கு வழங்குவதாக கூறியுள்ளது அந்தி நிதியிலும் மாவட்டத்தில் சகல பகுதிகளிலும் அபிவிருத்தி மேற்கொள்ள வேண்டியுள்ளது” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]