உயிரை காப்பாற்றிய நடிகை

உயிரை காப்பாற்றிய நடிகை

Samantha Ruth Prabhu

சினிமாவில் உள்ளவர்கள் பொதுவாக சமூக சேவையில் ஈடுபடுவது வழக்கம்.

த்ரிஷா, ஹன்சிகா என முன்னணி நடிகைகளும், விஜய், ரஜினி என முன்னணி நடிகர்களும் சமூக சேவையில் தம்மை ஈடுபடுத்தியுள்ளனர்.

இருப்பினும் நடிகை சமந்தா அனைவரிலும் வித்தியாசமானவர்.

Samantha Ruth Prabhu Actress

அவர் சினிமாவிற்கு வந்ததில் இருந்தே ஏழை குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

அந்த வகையில் நடிகை சமந்தா 15 குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றி இருக்கிறார்.

Samantha Ruth Prabhu

ஏழை குழந்தைகள், பெண்களுக்கு உதவுவதற்காக “பிரதியுஷா” என்ற தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்த சமந்தா, தனது மருத்துவ நண்பர்களுடன் சேர்ந்து இந்த அமைப்பின் மூலம் பல்வேறு மருத்துவ உதவிகளை செய்கிறார்.

இந்த தொண்டு நிறுவனத்தின் மூலம் அண்மையில் 15 குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், நிதி உதவியையும் செய்துள்ளார்.

Samantha Ruth Prabhu

அறுவை சிகிச்சையின் பிறகு இந்த 15 குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]