உயிரிழந்த மனைவியின் உடலை கணவன் தள்ளுவண்டியில் கொண்டு சென்ற கொடூரம்!!

உயிரிழந்த மனைவியின் உடலை கணவன் தள்ளுவண்டியில் கொண்டு சென்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டம் ஹரிகாபூர் கிராமத்தைச் சேர்ந்த கன்ஹாயாலாலின் மனைவி சோனி என்பவருக்கு திடீரென்று கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர் மைன்புரி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சோனி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மனைவியின் உடலை ஊருக்கு கொண்டு செல்ல கன்ஹாயாலால் ஆம்புலன்ஸ் கேட்டுள்ளார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வழங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆம்புலன்ஸ் கிடைக்காததால் வேறு வழியின்றி மனைவியின் சடலத்தை 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திற்கு ஒரு தள்ளு வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டே சென்றுள்ளார்.

கொளுத்தும் வெயிலில் வயதான தாயாரையும் அமர வைத்து அவர் தள்ளிச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி மனதைக் கரைத்துள்ளது.

இதை பார்த்த பலரும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த துன்பியல் செய்தி வெளியானதைத் தொடர்ந்து உரிய விசாரணை நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வட மாநிலங்களில் ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காமல் உயிரிழந்தவர்களின் சடலங்களை கையில் சுமந்தபடியே பல கிலோ மீட்டருக்கு கொண்டு செல்லும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அதுமட்டுமல்லாது இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்வதும் வாடிக்கையாகி வருகிறது.

மருத்துவமனைகளிலும் ஸ்ட்ரெட்சர் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் நோயாளிகள் இழுத்து செல்லப்படுவதும் தரையில் படுக்க வைக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

இதனை கருத்தில் கொண்டு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பலரும் தமது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]