உயிரிழந்த நிலையில் சிறுத்தைக் குட்டி மீட்பு

உயிரிழந்த சிறுத்தைக் குட்டி

ஹட்டன் லெதண்டி தோட்டத்தில், காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அண்மித்த பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தைக் குட்டியின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் சிறுத்தைக்குட்டி ஒன்று இருப்பதைக் கண்ட பிரதேச மக்கள், ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதன் பின்னர், சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்ற பொலிஸார் சிறுத்தையின் சடலத்தை மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]