உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்

உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று உள்நாட்டலுவல்கள் அமைச்சரான வஜித அபேகுணவர்த்தன நேற்று தெரிவித்தார்.

இதுதொடர்பில் நேற்றைய தினம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதும்; முற்றாக தேதமடைந்துள்ள வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதும் அரசின் பிரதான பொறுப்பாகவே காணப்படுகின்றது.
எனினும், பேஸ்புக் போன்ற சில சமூக வலைத்தளங்களில் அரசு மந்த கதியில் செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனை நாம் முற்றாக நிராகரிக்கிறோம்.

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்ட நாள் முதல் அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள், முப்படையினர், பொலிஸார் என அனைத்துத் தரப்பினரும் இரவு பகல் பாராது கடுமையாக உழைத்து வருகிறார்கள். மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவது மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது என சகல செயற்பாடுகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு தான் வருகின்றன.

இன்று (நேற்று) நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஹெலிகப்படர் விபத்துக்குள்ளான போதிலும், அதிலுள்ள பொருட்கள் பாதுகாப்பாக இறக்கப்பட்டு படகுகள் மூலம் மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிலைமைகள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமரும் மிகுந்த அவதானத்துடன் தான் இருக்கிறார்கள். அத்தோடு, பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக மீட்க முடியாத நிலைமைகளின்போது உயிர் பாதுகாப்பு அங்கிகளை அவர்களுக்கு துரிதகதியில் வழங்குவதற்கும் அரசினால் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]