உயிரிழந்தவர்களுக்கு ஆத்ம சாந்திப் பூஜை

ஆத்ம சாந்திப் பூஜை

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு ஆத்ம சாந்திப்பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று காலை 7.30 மணியளவில் வவுனியாவின் குட்செட் வீதியிலுள்ள கருமாரி அம்மன் ஆலயத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு இடம்பெற்றது.

தமிழ் விருட்சம் அமைப்பு மற்றும் கருமாரி அம்மன் ஆலய பரிபாலனசபையினரால் இந்த வழிபாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதரலிங்கம், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]