உயர்மன்றச் சிறப்பை இனிமேலும் தலைகுனியச் செய்ய முற்படாதீர்- நஸிர் அஹமட் கண்டனம்

ஜனநாயக ஆட்சிமுறைக்கான இருப்பிடம் பாராளுமன்றமாகும். இதுவே எந்தவொரு
நெருக்கடியான நிலையிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்து கின்ற அரணாகவும்
இருக்கிறது. இந்நிலையில் இதன் சிறப்பை மலினப் படுத்துகின்ற விதத்தில் கடந்த
வியாழன் மற்றும் வெள்ளி தினங்களில் அங்கு அரங்கேறிய சம்பவங்கள் உலக
அரங்கில் நம்மை தலைகுனியச் செய்துள்ளன. இத்தகைய சம்பவத்துக்குக் காரணமாக இருந்த அனைவருக்கும் நாம் எமது வன்மை யான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கி றோம்.

-இவ்வாறு கூறுகின்றார் கிழக்கின் முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீல. முஸ்லிம்
காங்கிரஸின் பிரதித் தலைவருமான நஸிர் அஹமட்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்தாவது:-

உயர்சபையில் நிகழ்ந்தேறும் நடைமுறைகள் தவறானவை எனக்கருதும் பட்சத்தில் அதற்கு எதிராகத் தமது எதிர்ப்பை முன்வைப்பது சபை அங்கத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் உரிய தார்மீக கடமையாகும். இதற்கான உரிமையும் பெறுப்பும் அவர்களுக்கு இருக்கின்றது.

அதனை அவர்கள் தத்தமது வரைமுறைகளுக்கு உட்பட்டு வழி நடத்தவேண்டுமே தவிர
அநாகரிகமாக நடந்து அதனை நிறைவேற்ற முற்படக்கூடாது.
கடந்த வியாழன் மற்றும் வெள்ளி தினங்களில் பாராளுமன்றில் சிலர்
கொண்டவிதம் இழுபறிகள் மற்றும் கைகலப்புகள் ஏற்பட்டு எமது பாராளுமன்றத்தின்
கௌரவம் சந்திசிரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

அரசியல் நாகரீகம் கருதும் எவரும் இதனை எற்றுக்கொள்ளமாட்டார்.
மக்களின் உயர்ந்த அதிகாரத்தைக் கொண்ட பாராளுமன்றத்தின் உறுப்பு ரிமையை
பெற்றவர்கள் அதன் ஜனநாயக மரபுக்கு மதிப்பளித்து. நாட்டில் தற்போது
ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும். நடந்து முடிந்த சம்பவங்கள் உலகையே வியம்பில் ஆழ்த்தியுள்ளன. இதனை அதிகார ஆசையின் வெளிப்பாடாகவே
பலரும் நோக்குகின்றனர்.

தொடர்ந்தும் இதுபோன்ற வருத்தத்துக்குரிய சம்பவங்கள் நடைபெற இடமளிக்காது.
நீதியும் நேர்மையும் பண்பும் பண்பாடும் தளைத்தோங்க ஜனநாயகத்தை நேசிக்கும்
அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும்எனக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]