உயர்தர மாணவியை பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்த முயற்சி

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்விக் கற்கும் மோகிங்டன் தோட்ட மாணவி ஒருவரை பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்த முயற்சி செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க கோரியும் இன்று பகல் 2 மணியளவில் டயகம நகரில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

டயகம இல. 02 தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று காலை 7 மணியளவில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது அதே பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான நபர் ஒருவரால் சிறுமி பாலியல் வன்புனர்புக்கு உட்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளார். பின்னால் அதே தோட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் இதனைக் கண்டு கூச்சலிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து சந்தேக நபர் அவ்விடத்தை விட்டு ஓடியதாக டயகம பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்ததையடுத்து சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்குற்றத்தை புரிந்தாக சந்தேகிக்கப்படும் நபருக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த கோரியுமே மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மோனிங்டன் தோட்டத்திற்கு பொது போக்குவரத்து இல்லாமை காரணமாகவே இவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெறுவதற்கு காரணமாக உள்ளதாக பெற்றோர்களும் மாணவர்களும் சுட்டிக்காட்டினர்.

உயர்தர மாணவியை பாலியல்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]