முகப்பு News Local News உயர்தர பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவிக்கு முல்லைத்தீவில் நடந்த விபரீதம்

உயர்தர பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவிக்கு முல்லைத்தீவில் நடந்த விபரீதம்

மாணவியை பளையைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன், நேற்று தனது நண்பர்களுடன் இணைந்து பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை வாகனமொன்றில் கடத்தி சென்று பளைப் பகுதியில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து விட்டு உடையார்கட்டுப் பகுதியில் இறக்கி விட்டுள்ளார்.

கலைப்பிரிவில் உயர்தர பரீட்சையில் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த 19 வயதுடைய மாணவி நேற்றைய தினம் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை இளைஞர்கள் சிலர் சேர்ந்து வாகனம் ஒன்றில் குறித்த யுவதியை கடத்தி பளைப் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளார்கள். அங்கு குறித்த யுவதியை, விருப்பத்திற்கு மாறாக இளைஞன், பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

மாணவி வீடு திரும்பாத நிலையில் நேற்றைய தினம் மாணவியின் தாயார் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் மாணவியைக் காணவில்லை என்று முறைப்பாடு செய்துள்ளார்.இந்நிலையில் கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டோர் இன்று காலை குறித்த மாணவியை உடையார்கட்டு பகுதியில் வாகனத்தில் கொண்டு சென்று இறக்கி விட்டுள்ளார்கள். இதையடுத்து மாணவி நடந்த சம்பவத்தினை தாயாரிடம் முறையிட்டுள்ளார்.

குறித்த மாணவியுடன் தாயார் பொலிஸ் நிலையம் சென்று நடந்த சம்பவத்தினை தெரியப்படுத்தியுள்ளார். இந்நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் கடத்திய இளைஞனை தேடி பளைப் பிரதேசத்திற்கு சென்று கடத்தல் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த ஒரு இளைஞனை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் கைது செய்யப்பட்ட இளைஞனை இன்று நீதி மன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com